Sunday, July 31, 2011

யோக நாள்



ஒரே நாளில் மூன்று திதி அல்லது
மூன்று நட்சத்திரம் வந்தால்
அந்த நாள் யோகம் நிறைந்த நாளாக
இருக்கும்.

புதுசு...புதுசு



ராகு/கேது ஏழில்
இருந்து ஐந்தாம் அதிபதி
ஆறு/எட்டு/பன்னிரண்டில்
இருந்தால்
வேற்று மதம்/வேற்று குலம்/வேற்று நாடு
அல்லது குறைந்த பட்சம் புது உறவாவது
அமையும்.

போரும் அமைதியும்



லக்னத்திற்க்கு இரண்டில்
செவ்வாய் இருப்பின் அந்த
ஜாதகரது வீட்டில் அடிக்கடி
சண்டை வரும். இரண்டாம்
வீட்டு அதிபதிக்குரிய
கடவுளை வழிபட்டால்
அமைதி வரும்.

Saturday, July 30, 2011

பாசக்கார பய...



செவ்வாய் பலம் உள்ளவர்கள்
அதிக கோபம் உள்ளவர்களாக
இருப்பர்,  எனினும் அதிக
அன்பு பாசம் காட்டுபவர்களாக
இருப்பர்.

பிற்கால நீதிமான்....



இளமையில் சனி  திசை
நடக்கும் ஜாதகர்
பிற்காலத்தில்
நீதிமானாக மாறுவார்.

Friday, July 29, 2011

மன வலிமை



லக்னத்தில் சனி இருந்து
மற்ற கெட்ட கிரகங்களின்
தொடர்பு இருப்பின்
உடலில் குறை இருப்பினும்
மன வலிமை அதிகமுண்டு.

மேஷம்





மேஷ லக்ன/ராசிக்காரர்கள்
முரட்டு அன்பு காட்டுபவர்கள்
ஆனால் திறந்த மனதுடன்
பழகுபவர்கள்

கணவன் அமைவதெல்லாம்.......



பெண்ணின் ஜாதகத்தில் 

ஏழாம் அதிபதி

அல்லது

சுக்கிரனை குரு பார்த்தால்

நல்ல  கணவன் அமைய வாய்ப்புண்டு

என்ன திடீர்னு இந்த பக்கம்?



ராகு/கேது திசையில்
புதன் புக்தி
அல்லது
புதன் திசையில்
ராகு/கேது புக்தி
வரும் போது
வேத ரகசியங்களை
வேத நுண்கலைகளை
படிக்க ஆர்வம் ஏற்படும்.

Thursday, July 28, 2011

புகழுக்கு.....?



கோசார குரு ராசிக்கு எட்டில் 
வரும்போது
புகழுக்கு பங்கம் வர
வாய்ப்புண்டு

குறிப்புதவி
மோஹனா, திருவண்ணாமலை

வாங்கிய வரம் சாமி



சனி பார்வையில் சுக்ரன் இருந்தால்
தாம்பத்ய சுகம் சிறிது குறைவாகவே
இருக்கும். மனசை தேத்திக்குங்க.
வாங்கி வந்த வரம் அவ்வளவுதான்.

குறிப்புதவி
ராஜா, மதுரை

Wednesday, July 27, 2011

சங்கீதமே!



சுக்ரன் இரண்டில் இருந்தால்
அந்த ஜாதகரது வீட்டில்
தினமும் இனிமையான
சங்கீதம் ஒலிக்கும்.

குறிப்புதவி
ராஜா, சென்னை

சந்திரனுக்கு கேந்திரம்



சந்திரனுக்கு கேந்திரங்களில்
ஒரு கிரகம் நீச்சமோ அல்லது
தோசமோ பெற்று இருந்தாலும்
அந்த கிரகம் நன்மையே
செய்யும்.

குறிப்புதவி
அவிட்டம் சீனிவாசன்

திருவாளர் கடுகடு



வாக்கு ஸ்தானமாகிய இரண்டில்
கேது இருப்பின் அந்த ஜாதகர்
பேச்சில் கடுகடுப்பு இருக்கும்.

குறிப்புதவி
ரமேஷ், சென்னை.

பெண்களுக்கு மட்டும்



லக்னத்தில் செவ்வாய் மற்றும்
ஐந்து அல்லது ஒன்பதில்
குரு பார்க்காத ராகு இருப்பின்
அந்த ஜாதகிக்கு மாதவிடாய்
பிரச்சனை உண்டு (குறிப்பாக
அதிக ரத்த சேதம்)

Tuesday, July 26, 2011

எப்போதும் படிக்க ஆசை



ஒன்று, ஐந்து மற்றும் ஒன்பது ஆகிய
திரிகோண ஸ்தானங்களில்
புதன் அஸ்தமம் ஆகாமல்
இருப்பின் ஜாதகர் வாழ்நாள் முழுதும்
கல்வி கற்க ஆசைப்படுபவராக
இருப்பார்.

Monday, July 25, 2011

தாமத திருமணம் யாருக்கு?



சூரியன் சுக்ரனோடு இணைந்தோ
அல்லதோ தனித்தோ
இரண்டு
ஏழு
எட்டு
ஆகிய இடங்களில் இருந்தால்
தாமத திருமணம்

குறிப்புதவி
ரகு, திருச்சி

கெட்டவன் மூன்றில்



தீய கிரகங்கள் மூன்றில் இருந்தால்
நல்ல பலன்கள் ஏற்படும்

உதாரண தம்பதியர்



கடகம் மற்றும் விருச்சிகம்
இவை இரண்டில் கணவன், மனைவி
அல்லது மனைவி, கணவன்
அமைவது பரஸ்பர வசிய
அமைப்பினை உருவாக்கும்.
இவர்களே உதாரண தம்பதிகள் ஆவர்.

அனுபவி ராஜா அனுபவி



லக்னத்தில் ராகு
நான்கில் சுக்ரன்
ஐந்தில் சந்திரன்
இந்த அமைப்பு உள்ளவர்கள்
வாழ்க்கையை அனுபவிக்க
பிறந்தவர்கள்.

Thursday, July 21, 2011

மகம் எப்படி?



மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
எந்தவொரு வெற்றியையும் எளிதாக
பெற்றுவிடமுடியாது. தினம், தினம்
போரடித்தான் பெற வேண்டும்

குறிப்புதவி
அகிலாபாரதி

அம்மாவை விட்டு பிரிக்கும் காலம்



சந்திரனுடன் ராகு அல்லது கேது சேர்ந்தால்
அவர்களது தசா புக்தியில் ஜாதகரை
அம்மாவை விட்டு தூரத்தே பிரித்துவிடும்.

குறிப்புதவி
தேவசேனா

Wednesday, July 20, 2011

ஐயா மனசிலே என்ன இருக்கு?



புதன் அஷ்டமத்தில் தனித்து இருந்தால்
பிறர் மனதில் மறைந்துள்ள ரகசியங்களை
கண்டு பிடிக்கும் திறமை உள்ளவர்

எந்த திசை? எந்த புக்தி? எந்த பலன்?



புதன் திசையில்
நல்ல பலன்கள் ஏற்படுவது
கேது, சுக்ரன், சந்திரன்
ராகு மற்றும் சனி புக்திகளின்போது
கெட்ட பலன்கள் ஏற்படுவது
செவ்வாய் மற்றும் குரு புக்திகளில்
சாதாரணமான பலன்கள்
சூரிய புக்தியின் போது

என்ன திடீர்னு கோயில் பக்கம்?



கோச்சார குரு பன்னிரண்டில்
வரும் போது ஆன்மிக நாட்டம்
அதிகமாகும்
குறிப்புதவி
டாக்டர் சி.சங்கரலிங்கம்
ஏ.கே.படவேடு

Tuesday, July 19, 2011

ஹெவி மீல்ஸ்



ஒருவரது ஜாதகத்தில் சனியும் ராகுவும்
பலம் பெற்று இருந்தால் அவர்கள்
அதிகம் சாப்பிடுவார்கள்

குறிப்புதவி
ஜோதிடர் சாமு


காதுக்கு கம்மல்



பெண்களது ஜாதகத்தில் சுப கிரகங்கள்
பதினொன்றாம் வீட்டினை பார்த்தாலும்
அல்லது பதினொன்றாம் வீட்டில்
சேர்ந்தாலும் காதுக்கு அதிக கம்மல்கள்
சேரும்


Monday, July 11, 2011

சிறந்த அறிவாளி




சூரியன் மற்றும் புதன் சேர்ந்து
ஒன்று, நான்கு, எட்டு, பன்னிரண்டில்
இருந்து பலம் பெற்றால் அந்த
ஜாதகர் அவரது துறையில் நிபுணத்துவம்
மிக்க அறிவாளியாக விளங்குவார்.

குறிப்புதவி
ஏ.ஏ.தாஸ்


பெண்களால் தொல்லை




கோச்சார சூரியன் ஜென்ம ராசிக்கு
எட்டில் வரும் போது குடும்பத்தில்
உள்ள பெண்களால் தொல்லை
வரும்


Sunday, July 10, 2011

இல்லறம் இனிக்கும்




சுக்ரன் அல்லது ஏழாம் அதிபதியை
குரு பார்த்தால் இல்லறம் இனிக்கும்


கல்வி மூலம் வருமானம்




புதன் பத்தில் கெடாமல் இருந்து
குரு பார்வையும் பெற்று இருந்தால்
அந்த ஜாதகர் பொறியியற் கல்லூரி/
மருத்துவக்ல்லூரி/ஏதோ ஒரு
கல்வி நிலையம் ஆரம்பித்து அதன்
மூலம் வருமானம் பார்ப்பவர்.


சித்து




சனி பதினொன்றில் இருந்தால்
சித்து விசயங்களில் நாட்டம்.
அந்த சனியை குரு பார்த்தால்
தீர்க்கதரிசி


Saturday, July 9, 2011

அருமையான திருமண பொருத்தம்




சிம்ம லக்ன பையனுக்கு
கடக லக்ன பெண்
அருமையான திருமண பொருத்தம்


நல்ல பேச்சாளர்




புதன் இரண்டில் இருப்பதை விட
இரண்டால் இடத்தை பார்த்தால்
அந்த அமைப்புடைய ஜாதகர் நல்ல
பேச்சாளராக விளங்குவார்.


Friday, July 8, 2011

கல்வியில் சறுக்கல்




ஆயில்யம், கேட்டை மற்றும் ரேவதி
நட்சத்திரங்களின் இரண்டு அல்லது
மூன்றாம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு
கல்வியில் பாதிப்புண்டு.


குரு பலம் இல்லாவிட்டாலும் திருமணம்




ராகு திசை சுக்ர புக்தி அல்லது
சுக்ர திசை ராகு புக்தி நடப்பின்
அந்த ஜாதகருக்கு குரு பலம்
இல்லாவிட்டாலும் திருமணம்
செய்யலாம்.

குறிப்புதவி
சாமு


கவலையில்லா தூக்கம்




சந்திரன் பன்னிரண்டில் இருந்து
குரு பார்வை பெற்றால் அந்த
ஜாதகர் எப்போதும் எந்த ஒரு
கவலையும் இல்லாமல்  நன்கு
தூங்குபவர் ஆவார்.


Thursday, July 7, 2011

ஏழரை யாருக்கு?




ஜென்ம சந்திரனுக்கு பன்னிரண்டு,
ஒன்று மற்றும் இரண்டில் கோச்சார
சனி வரும் காலமே அந்தந்த
ஜாதகரது ஏழரை சனி காலம் ஆகும்.
ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டரை
வருடம் ஆக மொத்தம் ஏழரை வருடம்.

குறிப்புதவி
அகிலா பாரதி


கடுமையான சொற்களை வீசுபவர்




கேது இரண்டில் இருந்து சனி பார்வை
பெற்ற அமைப்புடைய ஜாதகர்கள்
வாயை திறந்தால் கடுமையான
சொற்களாக வீசுபவர் ஆவார்.


தாமத உறக்கம்




சூரியன் நான்கு அல்லது ஐந்தில்
இருக்கும் ஜாதகர்கள் இரவில்
வெகு நேரம் கழித்து தூங்குபவர்கள்.


Wednesday, July 6, 2011

என்றும் அமைதியானவர் (Always Cool)




லக்னத்தில் சந்திரன் கெடாமல்
இருக்கும் அமைப்புடைய ஜாதகர்
எப்போதும் அமைதியாக இருக்கும்
சுபாவமுடையவர்.


நீங்கள் பிறந்தது வளர்பிறையிலா தேய் பிறையிலா



உங்களது ஜாதகத்தில் சூரியனுக்கு
ஏழு ராசிக்குள் சந்திரன் இருந்தால்
நீங்கள் வளர்பிறையில் பிறந்தவர்.

ஏழு ராசிக்கு மேல் இருந்தால்
நீங்கள் தேய்பிறையில் பிறந்தவர்.

குறிப்புதவி
வேணுகோபால், சி.எம்.சி.


Tuesday, July 5, 2011

காதல்




காதலில் ஈடுபட ஐந்து ஏழு
சம்பந்தம் வேண்டும்.
ஏழில் சுப கிரகம் இருப்பின்
அதில் வெற்றி உண்டு.

குறிப்புதவி
ஏ.ஏ.தாஸ்


உழைத்து உண்பவர்




சனி கேந்திரங்களில் இருந்தால்
அந்த ஜாதகர் உழைத்து
உண்பவர் ஆவார்.


சன்யாசி யோகம்!



நான்கு கிரகங்கள் பத்தில்
இருந்தால் சன்யாசி யோகம்
எனப்படும்.

குறிப்புதவி
வேணுகோபால், சி.எம்.சி.


Monday, July 4, 2011

பொய்




ராகு ஒன்று, இரண்டு, ஐந்து, ஒன்பதில்
அல்லது
சந்திரன் ராகு சாரம் பெற்றாலோ
அல்லது
சந்திரன் சனியுடன் தொடர்பு பெற்றாலோ
அந்த ஜாதகர்கள் பொய்யும் சொல்வார்கள்.
(ந்ன்கு கவனிக்கவும் பொய்யும்)


மார்பு வியாதிகள் வரக்கூடிய வாய்ப்பு




சனி பார்வை பெற்ற  செவ்வாய்
நான்கில் இருக்கும் அமைப்புடைய
ஜாதகருக்கு மார்பு தொடர்பான
வியாதிகள் வரக்கூடிய வாய்ப்புண்டு.


தடை படா கல்வி




புதன் நட்சத்திரத்தில் சனி நிற்கும்
அமைப்புடைய ஜாதகருக்கு
சனி திசை நடந்தாலும்
அந்த ஜாதகரின் கல்விக்கு
எந்த தடையும் வராது.


Sunday, July 3, 2011

அனுபவிக்க தடா




கேது நான்கில் இருப்பவர் ஓடி ஓடி
உழைத்து சம்பாதிப்பவராக் இருப்பார்
ஆனால் அவ்வாறு ச்ம்பாதிப்பதை
அவரால் ஏதும் அனுபவிக்க முடியாது


நல்ல வேலையில் உள்ள கணவர் யாருக்கு?




ஏழில் செவ்வாயும் குருவும் சேர்ந்து
இருந்து அசுபர் பார்வை இல்லாது இருப்பின்
அந்த ஜாதகிக்கு கௌரவமான பதவியில்
உள்ள கணவர் கிடைப்பார்.


நீடித்த புகழ் அமைப்பு




சூரியன் மூன்றில் இருந்தால்
அந்த ஜாதகர் நீடித்த புகழுடன்
விளங்குவார்


Saturday, July 2, 2011

180 டிகிரி




சூரியனுடன் ராகு/கேது இருந்து
அதன் 180 டிகிரியில் சந்திரனுடன்
ராகு/கேது இருக்கும் அமைப்புள்ள
நாளன்றே சந்திர கிரகணம் ஏற்படும்.

உதாரணத்திற்க்கு 18-06-2011 அன்றைய
நாளின் கிரக அமைப்பினை பார்க்கவும்.


திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com