Showing posts with label சிறப்பு. Show all posts
Showing posts with label சிறப்பு. Show all posts

Wednesday, February 2, 2011

ஆசைப்படு! பேராசைப்படாதே!



ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வேறுபாடு? இதற்க்கு ஒரு கதை சொன்னால் தான் புரியும். இதைதாங்க கதை சொல்லி விளங்க வைத்தல் என்கிறோம்.
ஒரு பணக்கார வீட்டு நாய், வீட்டு வாசலில் இரும்புக்கதவின் இடுக்கு வழியே தினசரி வேடிக்கை பார்ப்பதும் அவ்வப்போது தெருவில் செல்லும் தெரு நாய்களோடு பேசுவதும் வழக்கம்.
ஒரு நாள் ஒரு தெரு நாய்,  பணக்கார நாயோடு பேசும்போது
”நீ என்ன, உலகம் அறியாது உனது வாழ்க்கையை இந்த வீட்டோடு முடித்துக்கொள்ள போகிறாயா? வெளியில் வா! இந்த உலகைப்பார்! நீ ஒரே வகையான பிஸ்கெட் தான் சாப்பிட்டிருப்பாய்.  ஆனால் நானோ தெருவிற்குத் தெரு, குப்பைக்கு குப்பை விதம் விதமாக சாப்பிட்டுள்ளேன். இந்த உலகம், மனிதர்கள், உணவுகள் என எவ்வளவோ தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது தெரியுமா? வா வெளியே!” என்றது.
அந்த பணக்கார நாய் சிறிது யோசித்துவிட்டு ”எனக்கும் வெளியே வர ஆசைதான். ஒரு தகவல் சொல்கிறேன் கேள்” என்றது.
என்ன?
பத்து நாட்களுக்கு முன் எனது எஜமானுக்கும் அவரது மகளுக்கும்
சரியான சண்டை.
நான் கேட்டதற்கும் நீ சொல்வதற்கும் என்ன சம்பந்தம்?
கேளேன் தனது மகளுக்கு திருமணம் செய்ய வரன் பார்க்க ஜோசியரை எஜமான் அழைத்திருந்தார்.
நான் கேட்டதற்கும் நீ சொல்வதற்கும் என்ன சம்பந்தம்?
கேளேன் ஜோதிடரோ பெண்ணுக்கு ஏழில் ராகு,  திருமணம் தாமதமாகும் என்றார். பெண்ணோ ஏழாம் எண் வீட்டில்
இருக்கும் ரகுதான் வேண்டும் என்றாள்.
நான் கேட்டதற்கும் நீ சொல்வதற்கும் என்ன சம்பந்தம்?
கேளேன். சண்டை முற்றிப் போய் எனது எஜமான்
என்னைக் காண்பித்து “இந்த நாய்க்கு வேண்டுமானாலும்
உன்னை கட்டி வைப்பேனே அன்றி அந்த ரகுவிற்கு
உன்னை கட்டி வைக்கமாட்டேன்” என்றார்.
அதற்காகத்தான் காத்திருக்கிறேன்.
இப்போது ஆசைக்கும் பேராசைக்கும் வித்தியாசம்
புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

சொன்னவர்
ஆன்மிகச் சொற்பொழிவாளர் திரு சுகி. சிவம் அவர்கள்
நன்றி: 107.8 p.s.g. samuthaya vanoli, Coimbatore

Friday, January 28, 2011

கோவை நகரில் வித்தியாசமான மனிதாபிமான நடவடிக்கை

குடிபோதையில் வருடக்கணக்காக கொடுமைப்படுத்தியவரை கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொன்ற மகனையும், மனைவியையும் கைது செய்யாமல் கோவை போலீசார் விடுவித்தனர். கோவை நகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவின் உத்தரவின் பேரில் இந்த புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த மணி என்பவர் கடந்த முப்பது ஆண்டுகளாக எந்த வேலைக்கும் செல்லாமல் தினமும் மனைவி சம்பாதித்த காசை பிடுங்கி குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். மணியின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது. மேலும் அந்த பகுதி மக்களுடனும் மணி குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
கடந்த பதினோராம் தேதி இரவு வழக்கம் போல் குடித்து விட்டு வந்து தகராறு செய்து, தாயாரின் சொற்ப வ்ருமானத்தில் சிரமப்பட்டு கல்லூரியில்  படித்துக்கொண்டிருக்கும் தனது மகனையும், ”படித்தது போதும் வேலைக்குச் சென்று சம்பாதி” என்று திட்டி இருவரையும் சரமாரியாக தாக்க தொடங்கியுள்ளார்.  இதில் இருந்து தப்பிக்க தனது கணவரை பிடித்து மனைவி தள்ள, மகன் தனது தந்தையை தாக்க, இதில் மணி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
வழக்கமாக இது போன்ற சம்பவங்களில் தாயும் மகனும் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவர். இந்த வழக்கை மனிதாபிமான முறையில் அணுகிய காவல் துறை கல்லூரி மாணவரது கல்வி, எதிர்காலம்  மற்றும் தாயின் நிலையையும் கருத்தில் கொண்டு கொலைக்கான சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்படாமல் தற்காப்புக்கான சம்பவமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த சம்பவத்தில் நடைபெற்ற விபரங்கள் மற்றும் அப்பகுதி மககளின் சாட்சிய அடிப்படையில் கோர்ட்டில் அறிக்கை மட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளதாக போலீஸ் கமிஷ்னர் கூறியுள்ளார்.
கோவை நகரில் முதன்முறையாக வித்தியாசமான மனிதாபிமான  
நடவடிக்கையை காவல்துறை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினமலர், தினத்தந்தி

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com