Wednesday, October 26, 2011

Happy Diwali


இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


வேலூர் மாவட்ட  ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கத்தின் மூலமாக குறுஞ்செய்தி வாயிலாக மிக மிக சுருக்கமாக அலைபேசி மூலம் அனுப்பப்படும் ஜோதிட தகவல்களை பதிவாக அளித்தால் இதனால் பயன் பெறுவோர் பயன் பெறட்டும் எனும் நோக்கத்தில் பதிவிட்டு வருகிறோம்.

ஜோதிடக்குறிப்புகளை பதிவிட துவங்கி முதல் பதிவு 2009 மே மாதம் ஆரம்பித்து இரண்டரை ஆண்டுகள் முடிந்துள்ளது.

இதுவரை 80000 பார்வையாளர்கள்

சராசரியாக தினசரி 500 பேர் வருகை

அனைவருக்கும்

இனிய

தீபாவளி

நல்வாழ்த்துக்கள்



Tuesday, October 25, 2011

வேலை வாய்ப்புக்கான தேர்வுகளில் வெற்றி




ஜீவனாதிபதி கெடாமல் இருந்து
லக்னத்தில் உள்ள சூரியன் மற்றும் புதனை
குரு பார்க்கும் அமைப்புடைய ஜாதகர்
வேலை வாய்ப்புக்கான தேர்வுகளில்
எளிதில் வெற்றி பெறுவார்

தோல் ஒவ்வாமை நோய்




ராகு மற்றும் சனி சேர்ந்து
ஒன்று அல்லது ஆறில் இருந்தால்
அந்த ஜாதகருக்கு தோல் ஒவ்வாமை
நோய் ஏற்படும் வாய்ப்புள்ளது.

Monday, October 24, 2011

மற்றவர் சொத்து அனுபவித்தல்




ராகு ஐந்தில் இருந்து திசை நடத்தினால்
அந்த ஜாதகர் மற்றவர்களது சொத்து
சுகத்தினை அனுபவிப்பார்.

வேற்று மதத்து பெண்ணை திருமணம்





ராகுவும் செவ்வாயும் ஏழில்
இருந்தால் அந்த ஜாதகர் வேற்று
மதத்து பெண்ணை திருமணம்
செய்வார்.

Sunday, October 23, 2011

விருச்சிக ராசிக்காரர்கள்




விருச்சிக ராசிக்காரர்கள் சம்பந்தம்
இல்லாமல் மற்றவர் விஷயங்களில்
மூக்கை நுழைப்பார்கள்

மனைவியுடன் எட்டாம் பொருத்தம்




சந்திரன் எட்டாம் அதிபதியுடன் சேர்ந்து
ஆறு ஏழு எட்டில் இருந்தால்
அந்த ஜாதகர் மனைவியுடன்
சண்டை செய்பவராகவும் வாழப்
பிடிக்காமலும் இருப்பார்.

புகழுக்காக செலவு




புகழுக்காக செலவு செய்பவர்கள்
ஜாதகத்தில் பன்னிரண்டாம் அதிபதி
மூன்றாம் இடத்தில் இருப்பார்.

Saturday, October 22, 2011

கணவர்/மனைவி


மூன்று மற்றும் ஏழாம் அதிபதிகள்
ஒருவருக்கு ஒருவர்
தொடர்பு பெற்றால்
திருமணத்திற்க்கு முன்னர்
கணவர்/மனைவி ஒருவருக்கு
ஒருவர் தெரிந்தவராக இருப்பர்.

பேசியே காரியம் சாதிப்பவர்.


இரண்டில் ராகு இருந்து குரு ஆறு அல்லது        பத்தில் இருந்தால் அந்த ஜாதகர் பேசியே
காரியம் சாதிப்பவர்.

தாமத திருமணம்


ராகு மற்றும் கேதுவுடன்
செவ்வாய் அல்லது சுக்ரன்
சேர்ந்தால் தாமத திருமணம்
மற்றும் சில பிரச்சனைகள்
வாழ்க்கையில் ஏற்படலாம்.

Friday, October 21, 2011

சந்திரன்


  சந்திரனுக்கு பத்தில் சுப கிரகங்கள்
  இருப்பின் அவர்கள் நற்செயல்
  செய்து பெரும் புகழ்
  பெறுவார்கள்.


ஸ்திர லக்னம்


ஸ்திர லக்ன/ராசிக்காரர்களை
மற்றவர்கள் திருப்தி
செய்யமுடியாது.
அவர்களாகவே திருப்தி
அடைந்தால்தான் உண்டு.


விசாகம்


விசாக நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள்
எதையும் ஆராயாமல்
நம்பமாட்டார்கள்.
மேலும் எதிலும்
சிறிது சந்தேகப்படுவார்கள்



Thursday, October 20, 2011

பூரம்

ஆடிப்  பூர ஆண்டாள் 





பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
அதிலும் குறிப்பாக ஆடிப் பூரத்தில்
பிறந்தவர்களுக்கு
அம்மா அப்பாவின் முழு ஆதரவு
மற்றும் அன்பைப் பொழியும்
கணவன்/மனைவி அமைவார்கள்


லக்னாதிபதி நீச்சம் ஆனாலும்....!




லக்னாதிபதி நீச்சம் பெற்றாலும்
அதன் சாரநாதன்
பலம் பெற்றால்,
ஜாதகர் நன்றாக வாழ்வார்.

படிப்பில் சுட்டி யார்?



சூரியனும் புதனும் சேர்ந்து பத்து,
பாகைக்கு மேல் வித்தியாசம் இருந்தால்
அந்த ஜாதகர்
படிப்பில் கெட்டிக்காரன்.

Wednesday, October 19, 2011

நண்பர்கள்


                                    புதன் மற்றும் சுக்ரன்
                                 சேர்ந்து கெடாமல்
                                     லக்னத்தில் இருந்தால்

நண்பர்கள் தானாக 

விரும்பி வருவார்கள்

அத்தை மகள் யாருக்கு அமையும்?


 ஏழாம் அதிபதிக்கு
பதினொன்று மற்றும்
இரண்டாம் அதிபதியுடன்
சம்பந்தம் ஏற்பட்டால்
அந்த ஜாதகருக்கு
அத்தை மகளை மணக்கும்
வாய்ப்புண்டு

தாமத திருமணம் ஏன்?



சுக்ரனை சனி பார்த்தால்
தாமத திருமணம்.
பிறகும் திருப்தியற்ற
மண வாழ்க்கை

Tuesday, October 18, 2011

படிப்பதில் ஆர்வம்




புதனும் லக்னாதிபதியும் சேர்ந்து
ஐந்தில் இருந்தால் என்ன வயதானாலும்
படிப்பதில் ஆர்வம் இருக்கும்

விதி


லக்னாதிபதி நின்ற சர கிரகத்தின்
காரகப்படி ஜாதகர் விதி
இறுதியில் அமையும்

விந்து நட்டம்


கேது ஆறில் இருந்து
சுக்ரனோடு சேர்ந்தாலும் அல்லது
பார்த்தாலும் ஆண்களுக்கு
விந்து நட்டம் ஏற்படும்.

Monday, October 17, 2011

தேர்தலில் யாருக்கு வெற்றி?








கோசாரப்படி ராகு/சனி/கேது
லக்னத்தை குரு பார்த்தால்
தேர்தலில் வெற்றி வாய்ப்புண்டு

லக்னத்தில் ஏழாம் அதிபதி




லக்னத்தில் ஏழாம் அதிபதி இருந்தால்
இளமையில் திருமணம்.
எப்போதும் பெண்கள் புடை சூழ இருப்பார்.

ஜவுளி தொழில்




சந்திரனும் சுக்ரனும் சேர்ந்துள்ள
ஜாதகர்கள் செய்ய வேண்டிய தொழில்
ஜவுளி தொழிலாகும்.
இத்தொழிலினை செய்தால் நல்ல
லாபம் ஈட்டலாம்.

கேது திசை கேது புக்தியில்




கேது திசை கேது புக்தியின் போது
ஜாதகர்களில் பலர்
சித்த பிரம்மையில் கஷ்டப்படுவார்கள்.
இவர்கள் விநாயக பிரீத்தி செய்தால்
மனம் சந்தோஷம் பெறலாம்.

யாரால் பஞ்சாயத்து தலைவர் ஆக முடியும்?









ஜீவன ஸ்தானமாகிய பத்தாமிடத்தில்
சனி இருந்து சுப கிரகம் பார்த்தால்
பஞ்சாயத்து தலைவராகலாம்.

Sunday, October 16, 2011

இளமையில் திருமணம்


பெண்களுக்கு ஏழாம் அதிபதி செவ்வாய்
சாரம் பெற்றாலோ
ஆண்களுக்கு ஏழாம் அதிபதி சுக்ரன்
சாரம் பெற்றாலோ
அவர்களுக்கு இளமையில் திருமணம்.

ரிஷப லக்னக்காரர்கள்




ரிஷப லக்னக்காரகளுக்கு குரு ஆறு எட்டு
பன்னிரண்டில் இருந்தால் பெருத்த
ராஜ யோகங்கள் ஏற்படும்.
இளமையில் திருமணம்.

Saturday, October 15, 2011

கோசார சனி




ராசிக்கு ஆறாம் இடத்திற்க்கு
கோசார சனி வந்தால்
நீண்ட நாள் நிலுவையில்
உள்ள வழக்குகள் வெற்றியில் முடியும்.

Friday, October 14, 2011

சாமியார்



லக்னத்தில் கேது இருந்து சனி
பதினொன்றில் நின்றால்
சாமியாராகி ஊர் ஊராக சுற்றும்
வாய்ப்பு ஏற்படும்.

மீன லக்னக்காரர்கள்



எந்த ஒரு விஷயத்திலும்
இரண்டு எண்ணங்கள்
உடையவர்கள். ஆனால்
வெளியே சொல்ல மாட்டார்கள்.

ஜோதிடக்குறிப்புகள்


ஜென்ம செவ்வாய் நின்ற இடத்தில்
கோச்சார சனி வந்தால்
உறவினர் மற்றும் நண்பர்களுடன்
தேவையற்ற விரோதம்
ஏற்படும் வாய்ப்பு
குரு திசை ராகு புக்தியில்
பெருத்த பொருள்
ஏற்படலாம்.

Thursday, October 13, 2011

தாடி




பெண்கள் ஜாதகத்தில் லக்னம்
அல்லது இரண்டில்
ராகு இருந்தால், 
அந்த ஜாதகியின் கணவர்
அடிக்கடி தாடியுடன் இருப்பார்.

வெற்றி




அரசு பணிகளில் உயர் அதிகாரிகளை
சந்தித்து காரியம் சாதிக்க வேண்டுமா
அன்றைய சூரிய ஓரை நேரத்தினை
கண்டறிந்து அந்த நேரத்தில்
சந்தியுங்கள். வெற்றியினை ஈட்டுங்கள்.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Wednesday, October 12, 2011

பெண் பார்க்க வரச்சொல்லும் நேரம்




உங்கள் வீட்டு பெண்ணை பெண்
பார்க்க வருபவர்களை
வர வைக்கும் நேரம் சுக்ர ஓரையாக
இருக்குமாறு பார்த்து வரவழையுங்கள்.
பெண்ணை எல்லோருக்கும் பிடிக்கும்.

கணக்கில் புலி.




சூரியனும் புதனும் சேர்ந்து இருந்தால்
அந்த ஜாதகர் கணக்கில் புலி.

Tuesday, October 11, 2011

கூந்தல்


கூந்தல் அமைப்பு

லக்னத்தில் சனி இருந்தால் நீண்ட முடி
சந்திரன் இருந்தால் அடர்த்தி இருக்கும்
சுக்ரன் இருந்தால் அழகாக இருக்கும்.

மாடி வீட்டு அமைப்பு




கேது மற்றும் சனி நான்கில் இருந்தால்
அந்த ஜாதகர்கள் பெரும்பாலும்
மாடி வீட்டில் வசிப்பவர்களாகவே
இருப்பார்கள். இந்த அமைப்புள்ளவர்கள்
சரிபார்த்து உங்கள் அனுபவத்தினை
பகிரலாமே.

Monday, October 10, 2011

பாக்கியம்




இரண்டாம் அதிபதி ஒன்பதாம் வீட்டில்
இருந்தால் சம்பாதிக்கும் பணத்தினை
அனுபவிக்கும் பாக்கியம் இருக்கும்.

தொழில் நுட்ப படிப்பு





சனி செவ்வாய் சாரத்தையோ
செவ்வாய் சனி சாரத்தையோ
பெற்றுள்ள அமைப்புடைய
ஜாதகருக்கு தொழில் நுட்ப படிப்பு
மிகச் சிறந்த சிறப்பைத்தரும்.

விரைவில் வேலை




சனி நின்ற ராசி
பத்தாம் ராசி
பத்தாம் அதிபதி நின்ற ராசி
இவை அஷ்ட வர்க்கத்தில்
இருபத்தெட்டு பரல்களுக்கு
மேல் பெற்றால் விரைவில்
வேலை கிடைக்கும்.

Sunday, October 9, 2011

பூர்வீக சொத்துக்கள்/ பழைய சொந்தங்கள்




ஐந்தாம் அதிபதி எட்டில்
இருந்தால்
பூர்வீக சொத்துக்கள்
பழைய சொந்தங்கள்
கிடையாது.

அனுஷ நட்சத்திரக்காரர்கள்




அனுஷ நட்சத்திரக்காரர்கள்
பொறுமையானவர்கள்
அடிக்கடி சிரிப்பர்
சொந்த வீடு/நிலம் உண்டு
சம்பாதிக்கும் மனைவி
வருத்தம் தோய்ந்த தோற்றம்
தூய்மையற்ற ஆடை அணிவர்.

லக்னம் ராசி இரண்டும் கெட்டிருந்தால்




ஒருவரது ஜாதகத்தில் லக்னம் மற்றும் ராசி
இரண்டுமே கெட்டிருந்தால், அந்த ஜாதகத்திற்க்கு
பலமான கிரகத்தை ஆய்ந்தறிந்து அதன்
அடிப்படையிலேயே பலன் கணிக்கப்பட வேண்டும்.

Saturday, October 8, 2011

புறம் கூறல்/ கோள் சொல்லல்




சனி, புதன் மற்றும் ராகு சேர்ந்து
லக்னத்தை மறைமுகமாக
நடத்தும்  ஜாதகருக்கு புறம்
கூறல்/ கோள் சொல்லல்
குணம் இருக்கும்.

சூரியன் பன்னிரண்டில்




சூரியன் பன்னிரண்டாமிடமான
விரய வீட்டில் இருந்தால்
கண் தொடர்பான குறைபாடுகள்
வர வாய்ப்புண்டு.

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com