Wednesday, August 31, 2011

சனி + சந்திரன்

சனி  மற்றும் சந்திரன் நீர் ராசிகளில்
(கடகம், விருச்சிகம், மீனம்) இருந்தால்
குறட்டை அல்லது பெருமூச்சு
விடுவார்கள்.

முகூர்த்த நாள் முக்கியத்துவம்

திருமணம் செய்வதற்கு ஒரு ஆணும் பெண்ணும் எப்படி அவசியமோ, அதே போலத் தான் முகூர்த்த நாள் நிர்ணயிப்பதும். முகூர்த்தம் என்பது ஒன்றரை மணி நேர அளவுள்ள காலமாகும். ஒரு குழந்தையின் வளர்ச்சி, ஆரோக்கியம், புகழ், ஆயுள் போன்றவற்றைப் பார்க்க எப்படி குழந்தையின் ஜனன ஜாதகம் அவசியமோ அதே போல முகூர்த்த நாள் மற்றும் நேரம் நிர்ணயம் அவசியமாகிறது. கணவன், மனைவி பந்தம், சமுதாயத்தில்அவர்கள் வாழ்க்கை சிறத்தல், . இருவருக்கும் உள்ள அன்னியோன்யம், குழந்தைப்பேறு முதலிய பல நிகழ்வுகள் நல்லபடியாக அமைவதற்கு முகூர்த்த நாள் மற்றும் நேர நிர்ணயம் அவசியமாகிறது . மணமக்களின் ஜாதகங்களில் ஒரு சில குறைகள் இருந்தாலும் இந்த முகூர்த்த நேர லக்னம் நன்கு அமையுமானால் அந்தக் குறைகள் தெரியாமல் போகிறது. நாள் செய்வதை நல்லோரும் செய்யார்.
நல்ல நாள் பார்த்து எந்தவொரு வேலையையும் செய்தோம் என்றால் அந்த வேலையை சிறந்த முறையில் நவக்கிரகங்கள் நமக்கு அமைத்துக் கொடுத்துவிடும். மணமக்கள் இருவர் ஜாதகங் களையும் ஒப்பிட்டுப் பார்த்து இவர்களுக்கு திருமணம் செய்விக்கலாம் என்று ஜோதிடர்கள் தெரிவித்த பின்பு, இருவர் வீட்டில் உள்ள அனைவரும் சம்மதம் தெரிவித்த பின்னர் திருமண முகூர்த்த நாளை தேர்வு செய்ய முற்படவேண்டும். திருமணம் ஒருவருக்கு செய்ய முயலும் போது முதலில் அவரது நட்சத்திரத்தின்படி குருபலம் உள்ளதா என்று அறிய வேண்டும். குருபகவான் அவரவர் ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ம் இடங்களில் பிரவேசம் செய்யும் போது குரு பலம் இருப்பதாக கருதப்படுகிறது. குருபகவான் 2 ல் இருக்கும் போது திருமணம் செய்வித்தால் அந்த தம்பதியருக்கு தனசம்பத்துகள் கிடைக்கும். 5 ல் குரு இருக்கும் போது திருமணம் நடந்தால் சொற்படி நடக்கும் சத்புத்திரர்கள் பிறப்பார்கள். 7ல் குரு இருந்தால் பெண்கள் என்றும் தீர்க்கசுமங்கலியாக இருப்பார்கள். 9ல் இருக்கும்போது கணவருக்கு சகல செல்வாக்கும், 11ல் குரு தங்கும் போது திருமணம் செய்தால் மனைவி அல்லது கணவன் மூலம் செல்வங்கள் பல வந்து சேரும். குருபலம் ஆண் பெண் இருவருக்கும் இருப்பின் மிக்க நலம். இதில் பெண்ணிற்கு மட்டுமாவது இருப்பது இன்றியமையாதது. குருபலம் போலவே சூரிய பலமும் சிறிது முக்கியமாக கருதப்படுகிறது. சூரிய பலம் என்பது ஒருவரின் ஜென்ம ராசிக்கு சூரியன் 3, 6, 10, 11 ம் இடங்களில் பிரவேசம் செய்வதே ஆகும். சூரிய பலம் பெண்ணைவிட ஆணுக்கு மிக முக்கியமாக கருதப்படுகிறது. திருமணக்காலங்கள் மணமக்களுக்கு யோகாதிபதிகளின் தசாபுக்திகளாக அமைந்தால் அந்தத் திருமணம் சீரும் சிறப்புமாக அமையும். மணமக்கள் இருவருக்கும் குருபலம் இல்லாத சமயத்தில் இவர்களுக்கு சுக்ரன், அல்லது 2, 7, 11 ம் அதிபதிகளின் தசாபுக்திகள் நடந்தாலும் திருமணம் செய்விக்கலாம். மணமக்களுக்கு அ~;டம சனி காலத்திலும் விரய சனி நேரத்திலும் திருமணத்தை தள்ளிப்போடுவது சிறப்பை தரும். குருபலம், சூரியபலம், நல்ல தசாபுக்தி மற்றும் சனிபகவானின் தாக்கம் இல்லாத காலங்களை தேர்ந்தெடுத்த பின்னர் ஒரு நல்ல நாளை கீழ்கண்டவாறு தேர்வு செய்யலாம்.
1. சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி மற்றும் தை மாதங்ளை தேர்வு செய்து இவைகளில் மலமாதம் இல்லாத மாதத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
2. வளர்பிறையின் துவிதியை, திரிதியை, பஞ்சமி, சப்தமி மற்றும் திரயோதசி உள்ள நாட்கள்.
3. இருவர் நட்சத்திரத்திற்கும் தாராபலம் ஏற்றார்போல் உள்ள நாட்கள்.
4. அன்றைக்கு சந்திரன் ஐன்ம ராசிக்கு 1, 3, 6, 7, 10, 11 ராசிகளில் இருப்பது.
5. இரு கண்ணுள்ள நாட்களான புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகள் சிறந்தது. ஒரு கண்ணுள்ள நாட்களான ஞாயிறு மற்றும் திங்கள் பாதி சிறந்தது. குருட்டு நாட்களான செவ்வாய் சனியை தவிர்ப்பது உத்தமம்.
6. அக்னி ராசிகளான சிம்மம் மற்றும் மே~ம் முகூர்த்த லக்னமாக இல்லாது இருப்பது.
7. முகூர்த்த லக்னத்திற்க்கு 7, 8 இடங்கள் திதி சூன்ய ராசிகளாக அமையாமல் இருப்பது.
8. முகூர்த்த லக்னத்திற்க்கு ஏழாமிடம் சுத்தமாக இருப்பின் நல்ல கணவன் மனைவி
அமையும். எட்டாம் இடம் சுத்தமாயின் நீடித்த திருமணபந்தம். 12ம் இடம்
சந்தோ~த்தை குறிக்கின்றது. ஆக 2,7,8ம் இடங்கள் சுத்தமாக இருக்க வேண்டும் மற்றும் எட்டாம் இடத்தை குரு அல்லது சுக்ரன் பார்க்கலாமேவொழிய இந்த இடங்களில்இவர்கள் யாரும் இருக்கக்கூடாது.
9. உபஜெய ஸ்தானங்களான 3, 6, 11 ல் தீய கிரகங்கள் இருப்பது வாழ்க்கையின் வெற்றி மற்றும் ஆதாயங்களை குறிக்கும்.
10. திருமணநாள் மணமக்களின் ஜென்ம நட்சத்திரமாகவோ, ஜென்ம கிழமையாகவோஅமையாமல் இருப்பது மிக நல்லது.
11. நவக்கிரகங்களில் அதிக சுபத்தன்மை பொருந்திய குருவும் சுக்ரனும் மூடம் என்கின்றஅஸ்தங்க தோ~ம் அடைந்திருக்க கூடவே கூடாது.
12. ராகு காலம் மற்றும் ஏமகண்டம் போன்ற வி~நேரங்களை ஒதுக்க வேண்டும். குளிகைகாலத்தைக் கூட தவிர்ப்பது சிறந்தது. காரணம் குளிகை காலத்தில் செய்யும் காரியங்கள்திரும்பவும் செய்ய நேரிடலாம்.
13. மொத்தம் உள்ள பதினோறு கரணங்களில் அசுப கரணங்களை ஒதுக்கவேண்டும்.
சித்தயோகத்தை மாங்கல்ய தாரணத்திற்கும் அமிர்தயோகத்தை சாந்தி
முகூர்த்தத்திற்க்கும் தேர்வு செய்தல் வேண்டும்.
14. “பஞ்சகம்” என்ற முறையில் நல்ல நாளை தேர்வு செய்ய வேண்டும். பஞ்சகமுறையில் பார்த்தால் வருடத்திற்க்கு மிக குறைந்த முகூர்த்த நாட்களே வரும்.எனவே இதற்கு பரிகாரமாக இரத்தினம், சந்தனம், எலுமிச்சை, தீபம் மற்றும் தானியம்முதலியவைகளை துணிமணிகளுடன் சேர்த்து தானம் செய்யவேண்டும்.
15. பெண்ணிற்கு மாதவிலக்குக்கு உரிய நாட்களாக அமையாமல் இருப்பது அவசியம்.ஏனென்றால் இதில் புனிதமான அக்னியை வார்த்து இறைவனை அதில் வரவழைத்து வணங்குகிறோம்.
16. திருமணம் செய்ய இருக்கும் நாளுக்கு 15 தினங்கள் முன்பு அவரவர் குல தெய்வத்திற்கு பொங்கலிட்டு ஆராதனைகள் செய்து பிறகு முன்னோர்களை தியானித்துஅனுமதி பெறவேண்டும்.

இப்படி அமையும் திருமண உறவு என்றும் நிலைத்திருப்பதுடன், ஒருவரையொருவர் விட்டுத் தராமல் அன்புடன் இல்லற இன்பம் பெறுவார்கள் என்பது ஜோதிட ரகசியங்களில் ஒன்றாகும்.

(வாசகர்கள் ஜாதகம், ஜோதிடம் சம்பந்தமான கேள்விகளை அனுப்பலாம்)

மூலம்


மூல நட்சத்திரக்காரர்கள்
புகழுக்கு மயங்க மாட்டார்கள்.
தோல்வியைக் கண்டு கலங்க
மாட்டார்கள்.

அடிமை வாழ்வு.


லக்னாதிபதி நீச்சம் பெற்று
ஆறாம் அதிபதி ஆட்சி
அல்லது உச்சம் பெற்றால்
அடிமை வாழ்வு.

கன்னி ராசி


கன்னி ராசிக்காரர்கள்
அமைதியாக கனவுகளிலும்
கற்பனைகளிலும் மிதப்பார்கள்

Tuesday, August 30, 2011

ராகு


ராகு நான்கில் இருந்தால்
சொந்த ஊரில் தங்காமல்
பல ஊர்களை சுற்றித் திரிவர்.
முறையான வருமானமும்
இருக்காது.

உடல் நிலை நலிவு


ஆறாம் அதிபதி ஐந்தில்
இருந்தால் உடல் நிலை நலிவு வராது

குறிப்புதவி
ஜோதிடசிகரம் ரவிகுமார்

எம்.பி.ஏ


குரு ஒன்று ஐந்து ஒன்பது ல் 
இருந்தாலும் அல்லது பத்தாம்
இடத்தை குரு பார்த்தாலும்
நிர்வாகம் தொடர்பான படிப்பு
படிக்க அதிகம் வாய்ப்புண்டு (எம்.பி.ஏ)

Monday, August 29, 2011

சொந்த வீடு கட்டுவது கடினம்.


செவ்வாய்க்கு கேதுவின் சம்பந்தம் ஏற்பட்டால் (சாரம்/சேர்க்கை)
சொந்த வீடு கட்டுவது கடினம்.

குறிப்புதவி
ஜோதிடசிகரம் ரவிகுமார்

தாம்பத்ய சுகங்களில் குறைகள்


சனியும் சுக்ரனும் சப்தம
பார்வையாக நேருக்கு நேர்
பார்த்தால், தாம்பத்ய சுகங்களில்
சிறு சிறு குறைகள் எப்போதும்  இருக்கும்.

மனைவி பயப்படுவாள்.


செவ்வாய் சாரத்தில்
ஏழாம் அதிபதி அல்லது
பன்னிரண்டில் செவ்வாய்
இருப்பின் முதல் பத்து
வருடம் கணவனை
கண்டதும் மனைவி பயப்படுவாள்.
அதற்க்கு அப்புறம் என்று மட்டும்
கேட்க வேண்டாம். அது அவரவர் தலவிதி.

Sunday, August 28, 2011

வழக்குகளில் வெற்றி பெற


நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெற
மூன்று மற்றும் பதினொன்று அதிபதிகள்
சேர்க்கை மற்றும் 1-3-4-7-9-11 ல்
மூன்றாம் அதிபதி இருத்தல் மேலும்
தசா புக்தியையும் பார்க்க வேண்டும்.

(இப்போது தெரிகிறதா.... ஏன் நீதி தாமதமாகிறது என்று)

குரு பத்தில்


குரு பத்தில் தனித்து இருந்தால்  
வேலை தொடர்பான பிரச்சனை இருக்கும்.
அதிக வேலை குறைந்த வருவாய் நீடிக்கும்.

குறிப்புதவி
அவிட்டம் சீனிவாசன்.

வெளியூர் பயணம்

மேஷம், 
கடகம்,
துலாம்
மற்றும்
மகர ராசிகளில்
ஒன்று மற்றும் பத்தாம்
அதிபதிகள் இருந்தால்
ஜாதகர்
எப்போதும்
வெளியூர்
பயணங்களில்
இருப்பார்.

Saturday, August 27, 2011

வக்ர குரு

வக்ர குரு எட்டில் இருந்து
அதுவும் ஸ்திர ராசியாக
இருந்தால் ஜாதகர் டாக்டர்
பட்டம் பெற்று ஆராய்ச்சியில்
ஈடுபடுவார்.
கண்டுபிடிப்புகளும் உண்டு.

குறிப்புதவி
ஏ.ஏ.தாஸ்

லக்னம்


லக்னத்தில் சூரியன் அல்லது
லக்னாதிபதி இருந்தால் ஜாதகர்
சுதந்திரமாக இருப்பார்.

லக்னத்தில் செவ்வாய் இருப்பின்
போராடும் குணம் எப்போதும்
இருந்துகொண்டே இருக்கும்

லக்னத்தில் ராகு இருப்பின்
மிகவும் அனுசரித்துப்போபவராக
இருப்பார்

சந்திரன்


சந்திரனுடன் பாவிகள் சேர்ந்து இருந்தால் ஜாதரின் கண்களை சுற்றி கருவளையம் மற்றும் கண்கள் குழி விழுந்தும் இருக்கும்.

சந்திரன் லக்னத்தில் இருக்க குரு ஒன்பதில் இருந்தால் ஜாதகர் என்றும் மகிழ்ச்சியுடன் நன்றாக தூங்குவார்.

Friday, August 26, 2011

லக்ன பலன்


மேஷ ராசிக்காரர்கள் தூங்கிக்கொண்டு இருந்தாலும் பிரச்சனைகள் அவர்களை தேடி வந்து தொல்லை தரும்.

விருச்சிக லக்னக்காரர்கள் சிகப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை போன்ற வண்ணங்களை முக்கிய நேரங்களில் அளித்தால் வெற்றியினை குவிக்கலாம்.

கல்லீரல் மற்றும் சிறுநீரகம் மீது கவனம்


சுக்ரன் மற்றும் சனி சேர்ந்து
துலாம் அல்லது விருச்சிக
ராசியில் இருந்தால் கல்லீரல்
மற்றும் சிறுநீரகம் மீது கவனம்
தேவை.

Sunday, August 7, 2011

அரசியல் யாருக்கு?




ராகு பத்து அல்லது பதினொன்றில்
இருந்து சூரியனும் செவ்வாயும்
பலம் பெற்று இருந்தால் அந்த
ஜாதகர் அரசியலில் ஈடுபடுவார்.

குறிப்புதவி
ஆரோக்கியதாஸ்
சென்னை

அதிகாலை எழுதல்




சூரியன் ஒன்று, பதினொன்று
மற்றும் பன்னிரண்டில்
இருக்கும் அமைப்புடைய
ஜாதர்கள் விடியலில் எழும்
பழக்கம் உடையவர்கள்

50/50




செவ்வாய் மற்றும் குரு
சேர்க்கையால் பதவி, புகழ்,
செல்வம் கிடைத்தாலும்
கர்வம் மற்றும் பிறரை
மதியாமை குணம் இருக்கும்

Saturday, August 6, 2011

பொதுவாக காதல்




மீன ராசியில் செவ்வாய் இருந்தால்
பொதுவாக காதலில் தோல்வியே
ஏற்படும்

குறிப்புதவி
சரவணன், திருவண்ணாமலை

வாங்கிய வீடு தங்காது




லக்னத்திற்க்கு நான்கில் ராகு
இருந்து நான்காம் அதிபதியை
சுப கிரகம் பார்த்தால் சொந்தமாக
வீடு வாங்கி விற்றுவிடும்
அமைப்பாகும்

சொந்த வீடு




குடும்ப ஸ்தானத்தில்
பன்னிரண்டாம் அதிபதி
கெடாமல் இருந்தாலும்
வசதியான சொந்த வீடு
கட்டுவார்.

குறிப்புதவி
ராமன். சேலம்

Friday, August 5, 2011

தொப்பைக்கு வாய்ப்பில்லை




செவ்வாய் ஐந்து அல்லது
ஆறில் இருக்கும் ஜாதகர்கட்கு
தொப்பை வர வாய்ப்பில்லை.

சிம்ம/கன்னி லக்னக்காரர்கள்





சிம்ம/கன்னி லக்னக்காரர்கள்
கடன் தொல்லையில் இருந்து
விடுபட சனிக்கிழமைகளில்
சிவன் கோயில் சென்று வழிபட
வேண்டும்.

துலாம்/கும்ப லக்னக்காரர்கள்




துலாம்/கும்ப லக்னக்காரர்கள்
வெள்ளி கிழமைகளில் கோயில்
சென்று வழிபாட்டால் சகல
செல்வங்களையும் பெறலாம்.

Thursday, August 4, 2011

துலாம்




இந்த லக்னக்காரர்களது
திருமண வாழ்க்கையில்
ஏதாவது ஒரு குறை
இருக்கும்

மருத்துவ துறை




செவ்வாய் பத்தாம் அதிபதியாகி
கேது சாரம் பெற்ற அமைப்புடைய
ஜாதகர்கள் மருத்துவ துறையில்
இருப்பார்கள்

குறிப்புதவி
ரவிகுமார்

மிதுனம்




எந்த ஒரு காரியத்தையும்
அதன் நன்மை தீமைகளை
ஆராய்ந்து நன்கு யோசித்த
பின்னரே அந்த வேலையை
செய்பவர்கள்

Wednesday, August 3, 2011

தனுசு




இந்த லக்னக்காரர்கள்
எதிரிக்காரர்களுக்கும்
விருந்து உபசாரம்
செய்பவர்கள்

சொல் செயல் பேச்சு மாறாதவர்கள்




கேது இரண்டில் இருந்து குரு
பார்வை பெற்றிருந்தால்
அந்த ஜாதகர்கள்
சொன்னதை செய்பவர்கள்
செய்வதை சொல்பவர்கள்
பேச்சு மாறாதவர்கள்

ஐயா மாட்டி விட்டுடாதீங்க !



செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு
ராகு கேது தோஷம் உள்ளவர்களை
திருமணம் செய்விக்க்க்கூடாது.
அப்படிச் செய்தால் அந்த ஜோடிகள்
என்றென்றும் நிம்மதி இல்லாது தவிப்பர்.

Tuesday, August 2, 2011

எங்கே நிம்மதி பாடல் பிளீஸ்!



சனியும் செவ்வாயும் பரஸ்பர
பார்வை பெற்று
இருந்தால் அந்த ஜாதகர்
என்றும் மன நிம்மதி இல்லாது
தவிப்பார். எந்த பரிகாரமும்
பயன் தராது. 

சின்னம்... தேர்தல் சின்னம் அல்ல!



சனி ஒன்று/ஐந்து/ஒன்பது
ஆகிய இடங்களில் இருந்து
அவரை குரு பார்த்தால்
அந்த ஜாதகர் மத சின்னம்
அணிந்து இருப்பார்.

கிளி.. குருவி...புதன்...புரியுதா1



கிளி அல்லது குருவிகள்
மீது உங்களுக்கு அதிக விருப்பமா
அப்படியானால் நீங்கள்
புதன் ஆதிக்கம் உள்ளவர்தான்.

குறிப்புதவி
ஜோதிடர் சாமு

Monday, August 1, 2011

சரித்திரத்தில் உங்களுக்கு இடம் உண்டு



கேது அல்லது
கேது நின்ற ராசி அதிபதி
அதிக பலம் பெற்றால்
அந்த ஜாதகரினை
சரித்திரத்தில் இடம் பெற
வைப்பார்கள்

குறிப்புதவி
ஆரோக்கியதாஸ்
சென்னை

எப்படி.... இப்படி...



மாந்தி நின்ற ராசி அதிபதி
ஒன்று
ஐந்து
ஒன்பது
நான்கு
ஏழு
பத்து
ஆகிய இடங்களில்
அந்த ஜாதகர் மிகப்பெரும்
செல்வத்தை எளிதில் அடைவார்.

சின்னது பிடிக்காது



சனி லக்னத்தில்
இருந்தால்
அவர்கள் சின்ன சின்ன
விஷயங்கட்கு
ஆசைப்பட மாட்டார்கள்

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com