Friday, January 28, 2011

கோவை நகரில் வித்தியாசமான மனிதாபிமான நடவடிக்கை

குடிபோதையில் வருடக்கணக்காக கொடுமைப்படுத்தியவரை கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொன்ற மகனையும், மனைவியையும் கைது செய்யாமல் கோவை போலீசார் விடுவித்தனர். கோவை நகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவின் உத்தரவின் பேரில் இந்த புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த மணி என்பவர் கடந்த முப்பது ஆண்டுகளாக எந்த வேலைக்கும் செல்லாமல் தினமும் மனைவி சம்பாதித்த காசை பிடுங்கி குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். மணியின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது. மேலும் அந்த பகுதி மக்களுடனும் மணி குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
கடந்த பதினோராம் தேதி இரவு வழக்கம் போல் குடித்து விட்டு வந்து தகராறு செய்து, தாயாரின் சொற்ப வ்ருமானத்தில் சிரமப்பட்டு கல்லூரியில்  படித்துக்கொண்டிருக்கும் தனது மகனையும், படித்தது போதும் வேலைக்குச் சென்று சம்பாதி என்று திட்டி இருவரையும் சரமாரியாக தாக்க தொடங்கியுள்ளார்.  இதில் இருந்து தப்பிக்க தனது கணவரை பிடித்து மனைவி தள்ள, மகன் தனது தந்தையை தாக்க, இதில் மணி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
வழக்கமாக இது போன்ற சம்பவங்களில் தாயும் மகனும் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவர். இந்த வழக்கை மனிதாபிமான முறையில் அணுகிய காவல் துறை கல்லூரி மாணவரது கல்வி, எதிர்காலம்  மற்றும் தாயின் நிலையையும் கருத்தில் கொண்டு கொலைக்கான சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்படாமல் தற்காப்புக்கான சம்பவமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த சம்பவத்தில் நடைபெற்ற விபரங்கள் மற்றும் அப்பகுதி மககளின் சாட்சிய அடிப்படையில் கோர்ட்டில் அறிக்கை மட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளதாக போலீஸ் கமிஷ்னர் கூறியுள்ளார்.
கோவை நகரில் முதன்முறையாக வித்தியாசமான மனிதாபிமான  
நடவடிக்கையை காவல்துறை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினமலர், தினத்தந்தி

No comments:

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com