Friday, October 15, 2010

சகலகலாவல்லி மாலை


ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள்    இயற்றிய
சகலகலாவல்லி மாலை

வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 2

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே. 3

தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4


பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்
தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே. 5

பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பாடி
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே. 6

பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே. 7

சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 8

சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் தோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே. 9

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே. 10


Thursday, October 14, 2010

பித்ரு சாபம்

சூரியன் அல்லது சந்திரன்
சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களுடன்
சேர்ந்திருந்தால் பித்ரு சாபம் எனப்படும்.
இதனால் வாழ்க்கையில் தடைகள் உண்டாகும்.  
 "/blush"
புண்ய ஷேத்ரங்களில் பிண்ட தானம்
அளிப்பதன் மூலம் இதற்க்கு
தீர்வு காணலாம்.

சனி + சந்திரன்

சனி மற்றும் சந்திரன் நீர் ராசிகளில்
இருந்தால் (கடகம், விருச்சிகம், மீனம்)
ஜாதகர் குறட்டை அல்லது பெருமூச்சு
விடுவார்.
ஒரு முக்கிய குறிப்பு:
இந்த ஜாதக அமைப்பு இருந்து குறட்டையோ
பெருமூச்சோ விட்டால் சனி மற்றும் சந்திரனே
பொறுப்பு. இல்லாமல் விட்டால்
 ஜாதகரே பொறுப்பு.    ":))     :))    :))"

Monday, October 11, 2010

சூரியன் + புதன்

ஒன்று -நான்கு - எட்டில் சூரியன் மற்றும் புதன்
இணைந்து இருவரும் கெடாமல் இருப்பின்
ஜாதகர் மிக உயர்ந்த படிப்பு படிப்பார்.
குறிப்புதவி
அவிட்டம் ஸ்ரீனிவாசன்,
சித்தூர்.

சர லக்னம்

சர லக்னக்காரர்களுக்கு (மேஷம், கடகம், துலாம்,
மகரம்) இரண்டு மற்றும் ஏழாவது அதிபதிகள்
மாரகாதிபதிகள்.  அவர்கள்தான் மாரகம் அளிக்க
பொறுப்புள்ளவர்கள் ஆவர்.
(They are in charge of giving death)
குறிப்புதவி
ஜோதிடசிரோன்மணி
கடகம் எஸ். மனோகரன்

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com