1.தினப்பொருத்தம்:
மணமக்களின் உடல்நலத்தினை விருத்தி செய்கிறது.
இந்த பொருத்தம் இல்லையென்றால் டாக்டர் வீடே
கதி என்று இருக்க வேண்டும்.
2.கணப்பொருத்தம்:
மனிதரில் தேவம், மனுஷம், ராட்சஷம் போன்ற
குணங்கள் கொண்டவர்கள் இருக்கிறார்கள்.
இந்த பொருத்தம் அமையும் கணவன் மனைவிக்குள்
திருப்தி நிலை ஏற்பட்டு அயன, சயன, யோக,
பாக்ய என்கிற தாம்பத்ய உறவில் தென்றல் வீசும்.
3.மகேந்திரப்பொருத்தம்:
இப்பொருத்தம் அமையப்பெற்ற தம்பதிகளுக்கு
சற்புத்திரர்கள் பிறந்து அவர்களால் பாக்கியம்
பெறுவார்கள்.
4.ஸ்திரீ தீர்க்க பொருத்தம்:
பெண்கள் அஷ்ட ஜஸ்வர்யங்களுடன் தீர்க்க
சுமங்கலிகளாக வாழ்வார்கள்.
5.யோனிப் பொருத்தம்:
ஆண் பெண் புனிதமான அன்யோன்ய உறவில்
என்றும் நறுமணம் கமழ இப் பொருத்தம் அவசியம்.
6.ராசி அதிபதிப் பொருத்தம்:
கணவன் மனைவிக்குள் ஒற்றுமை நிலவ இது
உறுதுணையாக அமைகிறது. இதனால் குடும்ப
பிரிவினையை தடுக்க இயலும்.
7.ராசிப் பொருத்தம்:
இருவருக்குள் மாற்றுக்கருத்துக்கள் வராமல்
இருக்க இது உதவும்.
8.வசியப் பொருத்தம்:
ஒருவருக்கொருவர் வசியமாதல், அதாவது
கணவனோ அல்லது மனைவியோ சிறு சிறு
தவறுகள் செய்தாலும் கூட அவர்கள் மீது
ஏதோ இனம் புரியாத நெகிழ்ச்சி ஏற்படுத்தும்.
இது இல்லையென்றால் சக்களத்தி வரவும்
வாய்ப்புண்டு.
9.ரட்சுப் பொருத்தம்:
27 நட்சத்திரங்களை சிரசு, கண்டம், உதரம்,
தொடை, பாதம் என 5 வகையாக பிரித்து ஒரே
வகையுள்ள கணவன் மனைவி நட்சத்திரங்கள்
பொருந்தாது என அறிவித்துள்ளனர். இப் பொருத்தம்
மிக மிக முக்கியம். புருஷன் மற்றும் மனைவிக்கு
கண்டங்கள் இன்றி புத்திர சம்பத்துடன், செல்வ
நிலையுடன், ஸ்தல யாத்திரைகள் பல செய்து
இன்பமுடன் வாழ்வார்கள்.
10.வேதைப்பொருத்தம்:
இப்பொருத்தம் அமையப்பெற்றால் கணவன் மனைவிக்குள்
எதிர்மறையான கருத்துக்கள் வராது. இது அமையாத போது
கணவன் ஓரிடம் மனைவி ஓரிடம் என பிரிந்து வாழ்ந்தே
பெரும் நாட்கள் கழியும்.
முக்கிய குறிப்பு:
காதல் திருமணம் குரு நிர்ணயித்த திருமணம் தெய்வ
வாக்கு அமைத்த திருமணங்கள் கர்ப்பம் நிச்சிதமான
திருமணங்களுக்கு பொருத்தம் பார்க்காமல் திருமணம்
செய்விக்கலாம்.
மணமக்களுக்கு ஜாதகப்படியும் நட்சத்திரப்படியும்
பொருத்தங்களைப் பார்த்து இறை சிந்தனையுடன்
செய்யப்படும் திருமணங்கள் ஆல் போல் தழைத்து
அருகு போல் நீடித்து இன்பமுடன் வாழ வழி வகுக்கும்.
Monday, October 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)
திருக்குறள்
இலவச ஜோதிட ஆலோசனை
இலவச ஜோதிட
ஆலோசனைக்கும்
தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும்
தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும்
கேள்வியினை
அனுப்பவேண்டிய
மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com
Free Astrology Suggestions
Free Astrology suggestion/solution:
Clear your astrology doubts & clarification
ONLY ONE QUESTION.
contact-
vedicastrovellore@gmail.com
Clear your astrology doubts & clarification
ONLY ONE QUESTION.
contact-
vedicastrovellore@gmail.com
No comments:
Post a Comment