Tuesday, December 13, 2011

வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர் சங்க பட்டமளிப்பு விழா

வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம் மற்றும் சிவா அஸ்ட்ராலஜிகல் ரிசர்ச் பீரோ இணைந்து நடத்திய ஜோதிடக் கருத்தரங்கம் மற்றும் பட்டமளிப்பு விழா வேலூர் பாகாயத்தில் கடந்த  ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.
சங்க அமைப்பாளர் திரு ஏ.என்.ராஜாராமன் அவர்கள் விழாவிற்க்கு வந்திருந்தோரை வரவேற்றார்.
விழாவில் “சுக்கிரனின் சூத்திரம்” எனும் தலைப்பில் வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கத் தலைவர் திரு சண்முகம் அவர்களும், ”தடையில்லா தசம கேந்திரம்”  எனும் தலைப்பில் வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்க செயலாளர் திரு ரவிக்குமார் அவர்களும் பேசினர்.
சிறப்பு அழைப்பாளராக சென்னையைச் சேர்ந்த ஜோதிடர் திரு தாஸ் அவர்கள் கலந்துகொண்டு ஜோதிட வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். சங்க நிறுவனர் திரு பாலசுப்ரமணியன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
விழாவின் முடிவில் ஜோதிடர் சாமு நன்றி நவின்றார். விழாவிற்கான ஏற்பாடுகளை வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்க துணைத்தலைவர் ஜெயராதே செய்திருந்தார். நேரில் வந்து வாழ்த்திய அனைத்து அன்பர்களுக்கும் வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்.

No comments:

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com