Thursday, November 4, 2010

லட்சுமி குபேர பூஜை

தீபாவளி நாளில், திருப்பதி பெருமாளுக்கே கடன் அளித்த குபேரனையும் மகாலக்‌ஷ்மியையும் விஷேஷமாக வழிபடுவது நம் நாட்டில் பொதுவான வழக்கம்.
நகைக்கடைகளில் இந்த பூஜைக்கென்றே பிரத்யேகமாக சிறிய அளவில் வெள்ளிக்காசுகளை அர்ச்சிப்பதற்க்காக விற்கின்றனர்..
அந்தக் காசுகளால் இருவரையும் அர்ச்சித்து, பூஜை முடிந்தவுடன் வடை பாயாசம் இனிப்பு வகைகளை பிரதாமக வழஙகலாம்.
இப்பூஜை செய்தால் குபேரன் திருவருளும், மகாலக்‌ஷ்மியின் திருவருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.   

தீபாவளி


தீபாவளி நாளன்று ஆதி சஙகரர் அருளிய கங்காஷ்டக ஸ்லோகத்தினை
பாராயணம் செய்தால் நம்மை பீடித்திருந்த பாவஙகளும், நம் வெற்றிக்கு குறுக்கே வரும் தடைகளும் விலகிப் போகும் என்பது நம்பிக்கை.
நம்பிக்கை உள்ளோர்க்காக  ஆதி சஙகரர் அருளிய கங்காஷ்டக ஸ்லோகம்
ப்ரஹ்மாண்டம் கண்டயந்தி
ஹரசிரஸி ஜடாவல்லிமுல்லாசயந்தி
ஸ்வர்லோகாதாதாப தந்தி
கனக கிரி குஹா கண்ட சைலாத் ஸ்கலந்திறு
சோணிப்ப்ருஷ்டே லுடந்தி துரிதசய
சமுர் நிர்பரம் பர்த்சயந்தீ
பாதோதிம் பூரயந்தி ஸுரநகர ஸரித்
பாவனீந புநாது

குரு பலம்

திருமணம் என்றவுடன் அனைவரும் கேட்பது குரு பலம் உள்ளதா என்றுதான். காரணம் குரு பலம் உள்ள காலம், திருமணத்திற்க்கு ஏற்ற காலம் மட்டுமல்ல, அதற்க்காக எடுக்கும் முயற்ச்சியும் தடையில்லாமல் நன்மையாக முடியும்.  எனவேதான் திருமணம் செய்யும் காலத்தில் குரு பலம் பார்க்கிறார்கள்.
குரு ராசிக்கு ,2,5,7,9,11 ஆகிய இடங்களில் வரும் காலத்தில் அதிக நன்மை அளிப்பதால் குரு பலம் என்கிறோம். மேலும் அந்த இடஙகளில் இருந்து தனது 5,7,9 பார்வையாக பார்க்கும் இடமும் நன்மை அளிக்கிறது.
குரு இரண்டாமிடத்தில் வரும்போது குடும்பம் அமையவும், தன சம்பத்துக்கள் சேரவும் வாய்ப்புகள் ஏற்படுத்துகிறார்.
அய்ந்தாமிடத்திற்க்கு வரும் போது புத்ர பாக்யம் மற்றும் அவர் பார்வை பெறும் 9,11,ராசி ஆகிய இடங்களும் பலம் பெறுகிறது.
ஏழாமிடத்திற்க்கு வரும் போது நல்ல களத்திரம் அமையவும் அவர் பார்வை பெறும் 3,11 ஆகிய இடங்களும் பலம் பெறுகிறது.
ஒன்பதாமிடத்திற்க்கு வரும் போது பாக்கியங்கள் மற்றும் தெய்வ அருள் கிட்டவும்,  அவர் பார்வை பெறும் 3,5 ஆகிய இடங்களும் பலம் பெறுகிறது.
மேலும் குரு பலம் என்றால் கரு பலம் என்றும் பொருள். குரு ராசிக்கு 2,5,7,9,11 ஆகிய இடங்களில் வரும் போது ராசி மற்றும் புத்ர ஸ்தானம், ஐந்துக்கு ஐந்தான பாக்ய ஸ்தானஙகளில் அமர்ந்தும் பார்த்தும் புத்ர பாக்யத்திற்க்கு  பலம் சேர்க்கிரார்.
குரு சந்திரனுக்கு 2,5,7,9,11 ஆகிய இடஙகளில் வரும் போது திருமணம் நடைபெற்ற ஆண்கள் அவர்தம் மனைவி மூலம் பெறும் பாக்யங்கள்
குரு 2ல் நல்ல தாம்பத்ய சுகம், செல்வம்,வாகன வசதி.
     5ல் புகழ், சத்புத்ர யோகம், சமூக அந்தஸ்து.
     7ல் மழலை செல்வம், செல்வாக்கு, வெற்றிகள்
     9ல் பிரபலம், கீர்த்தி, லாபம்
     11ல் தெய்வ அருள், வசதி வாய்ப்புகள், அதிக இன்பம்.
ஒன்பது கிரகஙகளில் குரு அதிக சுபபலம் பொருந்தியவர் என்பதால் அவர் தீமை செய்ய வாய்ப்பு குறைவு. எனவே குரு பலம் வரும் காலத்தில் திருமணம் , சுப நிகழ்ச்சிகள் மற்றும் நற்காரியஙகள் செய்து நன்மை பெறலாம்.
கட்டுரையாக்கம்:  ஜோதிடஸ்ரீ எஸ்.ஆறுமுகம்
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சஙக ஜோதிட நண்பன் தனிச் சுற்று
இதழ் 1ல் (01-10-2010 நாளிட்ட இதழில்) வெளியான கட்டுரை

அஸ்தங்க தோஷம்


சூரியனுக்கு பத்து டிக்ரி உள் வரும் கிரகங்கள் தன் சுய பலத்தை இழந்து விடும். இதில் ராகு, கேது, சந்திரனுக்கு மட்டும் விதிவிலக்கு.

மகர லக்னம்


ஆடி மாதம் பிறந்த மகர லக்ன காரர்களுக்கு அமையும் மனைவி கணவனிடம் அதிக வருமானத்தை எதிர்பார்ப்பாள். மற்றும் கர்வி.

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com